திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அமைந்துள்ள ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூஜிக்கப்பட்ட புனிதநீர் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.