சீர்காழியில் திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணிடம், மணமகன் நண்பர்கள் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி ஒப்பந்தம் போட்ட சுவாரஸ்யம் அரங்கேறியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த முத்துக்குமாருக்கும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு வந்த மணமகன் முத்துக்குமாரின் நண்பர்கள், மணமகள் பவித்ராவிடம் 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளனர்.
அதில் திருமணத்திற்கு பிறகு எப்போதும் போல நண்பர்களுடன் சேர்ந்து வெளியே செல்வதற்கும், வெளியூர் சுற்றுலாவிற்கு செல்வதற்கும் தடையாக இருக்க மாட்டேன் என எழுதி கையெழுத்து வாங்கினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.