சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஆசிரியையின் தற்கொலை முயற்சி விவகாரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கொம்புகாரனேந்தல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தண்ணாயிரமூர்த்தி, விதிமுறைக்கு முரணாக மாணவர்களிடம் பணம் வசூல் செய்து தரக்கோரி ஆசிரியர்களை கட்டாயப்படுத்தியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வேதியியல் ஆசிரியை மீது தவறான தகவலை பரப்பியதால் அவர் டெட்டால் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உத்தரவிட்டுள்ளார்.