சாலை விபத்தால், உயிரிழந்து உடல் தானம் செய்யப்பட்டவரின் உடலுக்கு விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மரியாதை செலுத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த எடை சித்தூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சாலை விபத்தால் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அவரது உடல் தானம் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது உடலுக்கு மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.