ராமசாமி படையாட்சியாரின் 107வது பிறந்தநாளையொட்டி அவரது சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ராமசாமி படையாட்சியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.