மொபைல் ஆப் மூலம் க்யூ.ஆர். குறியீட்டைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் யுபிஐ பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 1 லட்சத்திலிருந்து 5 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கல்வி சேவை, மருத்துவமனை, வரி செலுத்துதல், அரசு நிதி பத்திரங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்கு இது பொருந்தும் என்றும், உச்சவரம்பு உயர்வானது இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.