எம்மி விருதுகள் பட்டியலில் ஷோகன் சீரிஸ் 18 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 76வது எம்மி விருது விழா நடைபெற்றது. தொலைக்காட்சி தொடர்களுக்கான ஆஸ்கர் என்று கருதப்படும் எம்மி விருதை ஷோகன், தி பியர் மற்றும் பேபி ரெயிண்டீர் உள்ளிட்ட தொடர்கள் அதிகளவில் பெற்றன.
அதிலும் 25 பிரிவுகளின் கீழ் தேர்வாகியிருந்த ஷோகன் சீரிஸ், அதிகபட்சமாக 18 விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்தது. பிரிட்டனை சேர்ந்த நகைச்சுவை நடிகர் வில் ஸ்மித்துக்கு திரைக்கதை வசனத்துக்காக ஒரு பிரிவில் விருது வழங்கப்பட்டது.