ஜம்மு-காஷ்மீரில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி என 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் தோடா பகுதியில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாவட்ட அதிகாரிகள் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஹர்விந்தர் சிங் கூறுகையில், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.