மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முகமது நபிகள் பிறந்த நாளை முஸ்லிம்கள் மிலாது நபியாக கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நல்லிணக்கமும், ஒற்றுமையும் எப்போதும் மேலோங்கட்டும். எங்கும் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்திடட்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.