சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகையை மீட்ட ரயில்வே போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஏளாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ், தமது குடும்பத்தினருடன் கொருக்குப்பேட்டைக்கு வந்துவிட்டு மீண்டும் கும்மிடிப்பூண்டிக்கு ரயிலில் திரும்பினார்.
அப்போது 3 சவரன் நகை வைத்திருந்த பையை ரயிலில் தவறவிட்டதை உணர்ந்த சந்தோஷ் ரயில்வே போலீசாரை தொடர்புகொண்டு விவரங்களை தெரிவித்தார். இதனையடுத்து பையை பத்திரமாக மீட்ட ரயில்வே காவல்துறையினர் அதனை சந்தோஷிடம் ஒப்படைத்தனர்.