திருச்சியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மெமு ரயிலில் உள்ள மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு நாள்தோறும் செல்லும் மெமு ரயிலின் மகளிருக்கான பெட்டியில், விதிமுறைகளை மீறி பயணிக்கும் இளைஞர்கள் சிலர், சீட்டு விளையாடும் வீடியோவை பெண் பயணி ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து அரங்கேறும் நிகழ்வுகளால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதற்கு ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண் பயணி கோரிக்கை விடுத்துள்ளார்.