சுதந்திரத்திற்காக சிவ சிதம்பர ராமசாமி படையாட்சி உழைப்பை போற்றுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது ; சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அய்யா சிவ சிதம்பர ராமசாமி படையாட்சி அவர்களின் பிறந்த தினம் இன்று.
இந்த தினத்தில், இந்தியாவின் சுதந்திரத்திற்காக அய்யா அளித்த உழைப்பையும், அரசியல் வாழ்க்கையில் சமுதாயத்திற்கு அளித்த பங்களிப்பையும் நினைவு கூர்ந்து போற்றுவோம் என எல்.முருகன் கூறியுள்ளார்.