சாம்சங் தொழிற்சாலை விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் ஏழாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.
மூன்று முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிடக் கோரி பேரணியாக செல்ல முடிவு செய்தனர். அதன்படி, கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
அப்போது, ஊர்வலமாக சென்ற 100க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.