திருவெண்ணைநல்லூர் அருகே வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே பருகம்பட்டு கிராமத்தில் உள்ள ராகவன் வாய்ககாலின் கரையின் மீது 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய மாதா கோயிலை கட்டி அப்பகுதிமக்கள் வழிபாடு நடத்தி வந்தனர்.
ராகவன் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கவிதா என்பவர் தொடர்ந்த வழக்கில், சிறிய அளவிலான மாதாகோவிலை இடித்து அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, ராகவன் வாய்க்கால் கரையின் மீதுள்ள மாதா கோயிலை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றபோது, எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், மாத கோயிலை நகர்த்தி வைக்க கால அவகாசம் வழங்குமாறு கோரினர். ஆனால், பலமுறை கால அவகாசம் வழங்கியும் பணியை தொடங்காததால், மாதா கோயிலை இடிக்கும் பணியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது, வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் செய்தனர். இச்சம்பவத்தால் கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.