வளர்ச்சியின் நாயகர், தேசத்தின் காவலர் பிரதமர் மோடி என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது 74வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், வளர்ச்சியின் நாயகர், தேசத்தின் காவலர் நமது பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்தி வணங்குவோம் என தெரிவித்துள்ளார்.