கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக கழுகு மலைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வானரமுட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால், பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.