விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஹைதராபாத் கைராபாத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 70 அடி உயர விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹைதராபாத் நகரில் நடப்பாண்டில் சுமார் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன.
இந்நிலையில், ஒன்பது நாள் விநாயக சதுர்த்தி விழா முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் பிற பகுதிகளில் இன்று நடைபெற்றது.
சிலைகளை கரைக்க தெலங்கானா அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. நீர்நிலைகளில் செய்ய்ப்பட்டுள்ள ஏற்பாடுகளை முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், கைரதாபாத்தில் வைக்கப்பட்டிருந்த 70 அடி பிரம்மாண்ட விநாயகர் சிலை இன்று ஊர்வலாக எடுத்து சென்று ஹுசைன் சாகர் ஏரியில் கரைக்கப்பட்டது.