சென்னை, கேரளா, உள்ளிட்ட மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நிதின் மதுகர் ஜம்தாரும்,
டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மன்மோகன் நியமிக்கப்பட்டுள்ளனர்
மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் தலைமை நீதிபதியாக சுரேஷ் குமார் கைட்-டும், நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியா மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எம்.எஸ்.ராமச்சந்திர ராவ் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.