மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று புதிய காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் வர்மா நியமிக்கப்பட்டார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்துக்கு நீதி கேட்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் குமார் கோயல் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தாவின் புதிய காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் வர்மா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் சிபிஐயின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் தலா காவல் நிலைய அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோரின் காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்தும் சீல்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.