இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக மாறும் என மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகத்தில் நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் கலந்து கொண்டார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு மத்திய அமச்சர் காசோலை வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர். பெண்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு பெரும் பங்கு என கூறிய அவர், அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறும் என பெருமிதம் தெரிவித்தார்.