ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய இறுதிப்போட்டியில் சீன கொடியை பாகிஸ்தான் வீரர்கள் வைத்திருந்தனர்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்தது. சீனாவுக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடிய இந்தியா, 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
அப்போது, பாகிஸ்தான் அணி வீரர்கள் சீன கொடியை கையில் ஏந்தியவாறு அமர்ந்திருந்த வீடியோ வைரலாகி வருகிறது.