லடாக்கின் லே எல்லை பகுதியில் இந்திய ராணுவம் 2-வது நாளாக ட்ரோன் கண்காட்சியை நடத்தியது.
ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாக இந்த கண்காட்சியானது நடைபெற்றது.
இதில் பயன்படுத்தப்பட்ட டிரோன்கள் அனைத்தும் ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த டிரோன்கள் மூலம் சவாலான நிலப்பரப்புகளிலும் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நுட்பங்களை மேம்படுத்த முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.