காரைக்காலில் இருசக்கர வாகனங்களை தள்ளிவிட்டு, ஷோரூமுக்குள் புகுந்து ரகளையில் ஈடுட்ட இண்டி கூட்டணி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய பந்த் நடைபெற்றது.
இதனையொட்டி காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே குவிந்த இண்டியா கூட்டணி கட்சியினர், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த தமிழக பேருந்துகள் உள்ளிட்டவற்றை தடுத்து நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். பின்னர், நேரு வீதியில் உள்ள ஒரு தனியார் ஷோரூமில் புகுந்த கும்பல், கடையை மூடவேண்டும் என மிரட்டியதோடு, அங்கிருந்த புதிய இருசக்கர வாகனங்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டது.
அவர்களை கட்டுப்படுத்தியபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.