டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அபாச்சி RR 310 பைக்கின் 2024 எடிஷனை அறிமுகம் செய்தது.
டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி பைக் மாடல்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த புதிய மாடலில் எல்இடி லைட்கள், டிஎப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
312 சிசி லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சினுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் ஆரம்ப விலை 2 லட்சத்து 75 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.