மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது EQS SUV எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
உலகின் முன்னணி சொகுசு கார் நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது.
அந்த வகையில் தற்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிய எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 7 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 809 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய திறன் கொண்டது.
மேலும் இதன் எக்ஸ் ஷோரும் விலை 1 புள்ளி 40 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.