இஸ்ரேலின் சூப்பர் ஸ்கெட்ச் - பேஜர்கள் மூலம் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது எப்படி?
Mar 15, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலின் சூப்பர் ஸ்கெட்ச் – பேஜர்கள் மூலம் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது எப்படி?

Murugesan M by Murugesan M
Sep 19, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனானிலும், சிரியாவிலும், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், லெபனானுக்கான ஈரான் தூதர் மொஜ்தபா அமானி உட்பட 2800 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் எப்படி இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்பது பற்றி பார்ப்போம்,

கடந்த அக்டோபர் 7ம் தேதி , இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தினர். இதனை தொடர்ந்து, இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியது. இதனையடுத்து, ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து, பேஜர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் பேஜர் குண்டுவெடிப்புக்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் வேகமாக பரவியது.

மளிகைக் கடை காசாளரின் அருகில் ஒரு சிறிய கையடக்க சாதனம் ஒருவர் பணம் செலுத்தும் போது, ​​வெடித்து சிதறுவதையும், சந்தையில் உள்ள ஒரு பழக் கடையில் நின்று கொண்டிருந்த ஒருவர் முன் பேஜர் வெடிப்பதையும், சாலைகள் எங்கும் இரத்தம் கொட்டி உறைந்திருப்பதையும் சிசிடிவி கேமிரா பதிவில் காண முடிகிறது.

முகம் சிதைந்த நிலையிலும்,கைகளில்,கால்களில் காயங்களுடனும் நடைபாதையில் மக்கள் நிலை குலைந்து விழுந்து கிடந்தார்கள் என்றும், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1959ம் ஆண்டில் தான் மோட்டோரோலா வாக்கி-டாக்கி மற்றும் கார் ரேடியோ தொழில்நுட்பத்தில் தனிப்பட்ட ரேடியோ தகவல்தொடர்புகளை உற்பத்தி செய்யத் தொடங்கியபோது ‘பேஜர்’ என்ற வார்த்தையை உருவாக்கியது. 1994ம் ஆண்டில், குறைந்தது 61 மில்லியன் பேஜர்கள் உலகம் முழுவதும் புழக்கத்தில் இருந்தது.

ஸ்மார்ட் போன்கள் வருகைக்குப் பிறகும் மருத்துவமனைகள் போன்ற சில முக்கிய துறைகளில் பேஜர்கள் இன்றும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆறு மாதங்களுக்கு முன், தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உறுப்பினர்களுக்கு, மொபைல் போன்களுக்குப் பதிலாக பேஜர்களைப் பயன்படுத்துமாறு ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லாஹ் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து, காசா போர் தொடங்கிய பின்னர் மொபைல் போன்களைத் தவிர்த்து விட்டு, பேஜர்களையே தங்களுக்கான தொலைதொடர்பு சாதனமாக ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பேஜர்கள் வெடிப்பு, டிஜிட்டல் ஹேக்கிங் முறையில் நடந்திருக்கலாம் என்றும், பேஜர்களில் வெடிபொருட்கள் சேர்க்கப்பட்டு வெடிக்க வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஐந்து மாதங்களுக்கு முன் ஹிஸ்புல்லா அமைப்பு, தங்கள் தேவைகளுக்காக, 5,000 பேஜர்களை வாங்க முடிவெடுத்திருந்தது. தைவானில் உள்ள கோல்ட் அப்பல்லோ நிறுவனத்திடம் இருந்து 5000 AP924 மாடல் பேஜர்களை ஹிஸ்புல்லா அமைப்பு வாங்கியது.

இந்த பேஜர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் இந்த பேஜர்கள் லெபனானுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த பேஜர்களில, சிறிய அளவிலான அதிக ஆற்றல் கொண்ட வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், கோல்ட் அப்பல்லோ நிறுவனர் ஹ்சு சிங்-குவாங், லெபனானில் பேஜர் வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பேஜர்களை தங்கள் நிறுவனம் தயாரிக்கவில்லை என்று மறுத்திருக்கிறார்.

இருப்பினும், பேஜர் வெடிப்பு நடந்த இடங்களில், AP924 மாடல் என அடையாளம் காணப்பட்ட பேஜர்கள், கோல்ட் அப்பல்லோவின் பேஜர்களுடன் ஒத்து போவதாகவும், அந்நிறுவனத்தின் ஸ்டிக்கர் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

லெபனானிலும் சிரியாவிலும் பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட அனைத்து பேஜர்களிலும் வெடிபொருட்களைச் சேர்த்து , ஒரே நேரத்தில் அத்தனை பேஜர்களையும் வெடிக்க வைத்துள்ளனர் என்று இராணுவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பேஜர் வெடிப்பு தாக்குதல் இஸ்ரேலின் கோழைத்தனமான நடவடிக்கை என்று குற்றம் சாட்டி உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கூறியுள்ள லெபனான் அரசு, இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

ஆனால் பேஜர் வெடிப்பு குறித்து,இஸ்ரேல் இராணுவம், அமைதி காத்துவரும் நிலையில், இந்த சம்பவத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கெனவே 1996ம் ஆண்டு முக்கிய ஹமாஸ் தீவிரவாதியை அவரது மொபைல் போனுக்குள் வெடிபொருட்கள் மறைத்து வைத்து கொன்ற சம்பவம் இஸ்ரேலின் உளவு மற்றும் இராணுவத்தின் திறமையை வெளிக்காட்டியது.

இப்போது, ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து நடத்தப் பட்ட பேஜர் குண்டுவெடிப்பு தாக்குதல், உலகில் முதல்முறையாக சர்வதேச நாடுகளின் உளவு அமைப்புக்களையும் சைபர் பாதுகாப்பு நிபுணர்களையும் தலைசுற்ற வைத்திருக்கிறது.

Tags: pagers used to blastLebanonSyria.Hezbollah militantsMojtaba Amani.
ShareTweetSendShare
Previous Post

வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Next Post

சேலத்தில் விநாயகர் சிலையை உடைத்த இருவர் கைது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies