லெபனானில் பேஜர்கள் வெடித்துச் சிதறிய நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் வெடித்தது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர் வெடித்து சிதறியதில் 8 பேர் பலியானார்கள், 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பயன்படுத்தி வந்த வாக்கி – டாக்கி வெடித்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 450க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.