குஜராத்தில் உள்ள அனைத்து புல்லட் ரயில் நிலையங்களிலும் அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன.
மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதை என அழைக்கப்படும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக குஜராத்தில் உள்ள எட்டு நிலையங்களின் அடித்தளப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்துள்ளது.
புல்லட் ரயில் தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வந்துவிட்டது. ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் மூலம் நாங்கள் முன்னேறி வருகிறோம் என புல்லட் ரயில் திட்ட இயக்குநர் பிரமோத் சர்மா தெரிவித்துள்ளார்.