பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐநா தீர்மான வாக்கெடுப்பில் த்திற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்கவில்லை.
ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை நிறுத்த வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தியும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில், பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 124 வாக்குகள் கிடைத்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தன. இந்தியா உள்ளிட்ட 43 நாடுகள் புறக்கணித்தன.