தேனி மாவட்டம் பெரியகுளத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சிவபெருமான் சிலை வைத்து திருவாசக முற்றேந்தல் பாடல் பாடி, சிவனடியார் பக்தர்களுடன் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.
ஓபிஎஸ் அவருடைய பழைய வீட்டிற்கு எதிராக உள்ள காலி இடத்தில் பிரம்மாண்டாக பந்தல் அமைத்து வழிபாட்டில் ஈடுபட்டார். மேலும் திருவாசகத்தின் 58 பதிகத்தில் உள்ள 658 பாடல்களைப் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்று, திருவாசகப் பாடல்களை பாடி வழிபாடு நடத்தினர்.