திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வக அறிக்கை வெளியானது தற்போது பூதாகரமாகி வருகிறது.
திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் திருப்பதி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது அனைவரையும் கவலை அடையச் செய்திருப்பதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரசால் அமைக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் பவண் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் கோயில்களை இழிவுபடுத்துதல் உள்பட பல சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும், முழு பாரதத்திலும் உள்ள கோயில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய, தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் ஆந்திர துணை முதலமைச்சர் பவண் கல்யாண் தெரிவித்துள்ளார்.