வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நண்பரின் இரண்டு குழந்தைகளை கொன்ற கட்டிட ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம் அடுத்த சிங்கில்பாடி ஏரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரரான வசந்த்குமாரும், திருப்பத்தூரை சேர்ந்த யோகராஜ் என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் யோகராஜின் வீட்டுக்கு சென்ற வசந்த்குமார், கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அவரது குழந்தைகளான யோகித், தர்ஷன் ஆகிய இருவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். வெகு நேரமாகியும் அவர்கள் திரும்பாததால் அதிர்ச்சியடைந்த யோகராஜ், காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வசந்த்குமார் இரு குழந்தைகளையும் கொலை செய்தது தெரியவந்தது. குழந்தைகளின் உடலை மீட்ட போலீசார் வசந்த்குமாரை கைது செய்தனர். குழந்தைகள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.