சென்னை கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கொட்டிய கட்டடக் கழிவுகளை வரும் 30ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டுமென, தமிழக அரசுக்கு தேசிய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டால் கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகளால் நீரோட்டம் பாதிக்கப்படும் எனவும், ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகள் முறையாக அகற்றப்பட்டதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக கழிவுகள் அப்புறப்படுத்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளதாக நீர்வள ஆதாரத்துறை பதிலளித்துள்ளது.
கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து தாமாக முன்வந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்டது குறிப்பிடதக்கது.