வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேங்கை வயல் சம்பவம் நடந்து இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில், சிபிசிஐடி போலீசார் 189 நபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேலும், 21 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகள் ஒத்துப் போகாததால், 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஒரு மாதம் கால அவகாசம் வழங்குமாறு சிபிசிஐடி கோரிக்கை விடுத்தது.
இதனை ஏற்று கொண்ட புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றம் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.