இஸ்ரேலின் போர் தந்திரம் - பேஜரை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் மூலம் தாக்குதல்!
Sep 10, 2025, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலின் போர் தந்திரம் – பேஜரை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் மூலம் தாக்குதல்!

Web Desk by Web Desk
Sep 20, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனானில் பேஜர் குண்டுவெடிப்பு நடந்த 24 மணி நேரத்துக்குள் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினரால் பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் சுமார் 450 பேருக்கும் மேல் படுகாயம் அடைந்துள்ளனர். பேஜர்கள், வாக்கி-டாக்கிகளை வெடிக்க வைத்ததில் இஸ்ரேல் ராணுவத்தின் நோக்கம் என்ன ? ஹிஸ்புல்லாவுக்கும், ஹிஸ்புல்லாவை பின்னால் இருந்து இயக்கும் ஈரானுக்கும் இஸ்ரேல் சொல்லும் செய்தி என்ன ? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

1948ம் ஆண்டு முதல் நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் இன்னும் முடியவில்லை. கடந்த அக்டோபர் 7ம் தேதி , இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து, போர் இன்னும் தீவிரமாகி இருக்கிறது.

ஹமாஸுக்கு ஆதரவாக, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்துகிறது.

ஏற்கெனவே லெபனானில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் பலியாயினர். சுமார் 3000 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரால் பயன்படுத்தப்பட்ட வாக்கி டாக்கிகள், தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள், பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு லெபனான் போன்ற ஹிஸ்புல்லாவின் கோட்டைகளாக கருதப்படும் இடங்களில் வெடித்தன.

குறிப்பாக, பேஜர் குண்டுவெடிப்பில் பலியான ஹிஸ்புல்லா அமைப்பினரின் இறுதி ஊர்வலத்தில், வாக்கி டாக்கிகள் வெடித்தன. நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. வாக்கி டாக்கி மட்டும் இன்றி, மடிக்கணினி,மொபைல் போன்கள், சோலார் பேனல்கள் என பல்வேறு சாதனங்கள் வெடித்திருக்கின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடித்த IC-V82s வாக்கி-டாக்கிகள், ஜப்பானின் ICOM நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ள நிலையில், அந்த மாடல் வாக்கி டாக்கிகளின் தயாரிப்பை நிறுத்தியே 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நாட்டின் வடக்கில் இருந்து புலம் பெயர்ந்த 60,000க்கும் மேற்பட்ட மக்களைப் பத்திரமாக வீடுகளுக்கு திருப்ப அனுப்பி வைப்பதாக கூறியிருக்கிறார்.

இதனிடையே, இஸ்ரேல் ராணுவ அமைச்சர் யோவ் கேலண்ட், போர் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகர்வதாகவும், ராணுவத்தின் 98-வது பிரிவு காசாவிலிருந்து இஸ்ரேலின் வடக்கே நிலைநிறுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், மேம்பட்ட இராணுவத் தளவாடங்கள் வழங்குவது, ஆயுதப்பயிற்சி அளிப்பது, மற்றும் உளவுத்துறை சார்ந்தும் ஈரான் மறைமுகமாக ஹிஸ்புல்லா அமைப்பிற்கு உதவி செய்து வருகிறது.

இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் தகவல் தொடர்பு சாதனங்களை எளிதில் ஊடுருவி அவற்றில் வெடிமருந்து வைத்து ,வெடிக்கச் செய்திருக்கிறது இஸ்ரேல். ஹிஸ்புல்லாவுக்கு மட்டும் இன்றி இது ஈரானுக்கும் பின்னடைவாகத் தான் பார்க்கப்படுகிறது.

ஈரான் தலைநகரில், அரசு மாளிகையில் வைத்து ஹமாஸ் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை கொன்றதும், இப்போது பேஜர், வாக்கி டாக்கிகள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருப்பதன் மூலம், தாங்கள் இன்னும் வலிமையாக இருப்பதை இஸ்ரேல் உறுதிபடுத்தி இருக்கிறது.

மேற்கு ஆசிய மண்டலத்தின் எல்லைப் பகுதிகளில் தன் ஆதிக்கத்தைத் திணிக்கும் ஈரானின் உளவு அமைப்புக்கு விடப்பட்ட சவாலாகவே இந்த பேஜர் வாக்கி டாக்கி தாக்குதல்கள் சர்வதேச அளவில் பார்க்கப்படுகின்றன.

காசா போர் தொடங்கி ஓராண்டு நெருங்கும் நிலையில், இந்த தாக்குதல், எதிரியின் நாட்டுக்குள் இஸ்ரேல் ஊடுருவி விட்டதைக் காட்டுவதாக, பிரான்ஸ் ராணுவ பாதுகாப்பு ஆலோசகர் Pierre Servent தெரிவித்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் ஒரே திட்டத்தால் பல்வேறு இடங்களில் பேரழிவை ஏற்படுத்த முடியும் என்பதை இஸ்ரேல் வெளிக்காட்டி இருப்பதாக, இஸ்ரேலின் முன்னாள் கடற்படைத் தளபதி இயல் பிங்கோ கூறியிருக்கிறார்.

ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, இனி இஸ்ரேலுக்கு எப்படி பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்து போரின் தன்மை மாறலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஹமாஸ்- இஸ்ரேல் போர் ஓராண்டாக நடந்துவரும் நிலையில் , ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கி இருக்கிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags: walkie-talkie blastPalestineLebanonIsraeli armyHezbollah militants
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் – ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்!

Next Post

ஜார்கண்டில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies