அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடித்த வேட்டையன் திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக விஜயவாடாவில் கூலி படத்தில் பங்கேற்றிருந்த ரஜினி சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் உதயநிதி துணை முதல்வர் தொடர்பான கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.
இதனால் கோபமான ரஜினி அரசியல் கேள்வி கேட்காதீங்கனு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் என்று பதிலளித்தார்.
மேலும், வேட்டையன் திரைப்படம் நன்றாக வந்துள்ளதாகவும், இசை வெளியீட்டு விழாவில் யார்யார் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்பது குறித்து சரியாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.