வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் போலி டிக்கெட்கள் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேட்டையன் இசை வெளியீட்டு விழா சென்னை சென்ட்ரல் அருகே உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
இந்நிலையில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் போலி டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிக்கெட் இருந்தும் ரசிகர்களை உள்ளே விடாமல் வெளியே நிற்க வைத்ததால் காவல் துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் லைகா நிறுவனம் ஏற்பாடு செய்யும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு இனிமேல் செல்லப் போவதில்லை என வேதனையுடன் கூறினர். போலீசார் அனுமதிக்காததன் காரணமாக ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்தின் வெளியே குவிந்ததனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.