அரியலூர் மாவட்டத்தில் பெண்ணிடம் சுமார் 5 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் சாந்தி என்ற பெண்ணிடம் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சாந்தி, ஆனந்தராஜிடம் சுமார் 5 கோடி ரூபாய் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அந்தப் பணத்தை ஆனந்தராஜ் முறையாக திருப்பி வழங்காததால் சாந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆனந்தராஜை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.