திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்த ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பதி கோயிலுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.புட்ஸ் நிறுவனம் நெய் சப்ளை செய்தது. இந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பேசிய மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற் பொறியாளர் அனிதா, நிறுவனத்தில் இருந்து வரக்கூடிய கழிவு நீரை ஆய்விற்காக எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். மேலும் இந்த ஆய்வில் குறைகள் கண்டறியப்பட்டால் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.