காஞ்சிபுரத்தில் இலவச ஆன்மீக சுற்றுலா பேருந்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள வைணவ கோயில்களுக்கு பக்தர்கள் இலவசமாக சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான தொடக்க விழா காஞ்சிபுரம் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.
தொடர்ந்து 40 பக்தர்கள் சுற்றுலா செல்லும் வேன்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.