திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் பிரேம் ஜி சுவாமி தரிசனம் செய்தார்.
விஜய் நடிப்பில் வெளியான “கோட்” திரைப்படத்தில் நடிகர் பிரேம் ஜி நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தனது மனைவி இந்து உடன் திருச்செந்துர் சுப்பிரமணியர் சந்நிதியில் அவர் வழிபாடு நடத்தினார்.
கோவிலில் மூலவர் சண்முகர் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். பின்பு வெளியே வந்த பிரேம்ஜியை சூழ்ந்து கொண்ட கோவில் காவலர்கள், ரசிகர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.