திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது, சென்னை தியாகராய நகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் புகார் அளித்துள்ளார்.
விலங்குகளின் கொழுப்பு கலந்த லட்டு திருப்பதியில் விநியோகிக்கப்பட்டதால் தனது மத உணர்வு காயப்பட்டதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை காவல்துறை ஆணையருக்கும் புகார் மனுவின் நகலை இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார்.