சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி, திருவனந்தபுரம் சங்குமுகம் கடற்கரையில் நடைபெற்ற தூய்மை பணியில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பங்கேற்றார்.
இதற்கான ஏற்பாடுகளை திருவனந்தபுரம் என்சிசி மாணவர்கள் மேற்கொண்டனர். முகாமையொட்டி, சங்குமுக கடற்கரையில் கிடந்த மக்கும், மக்கா குப்பைகளை என்சிசி மாணவர்கள் சேகரித்து அகற்றினர்.