லெபனானில் பேஜர் வெடித்து 12 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
லெபனானில் பேஜர் உள்ளிட்ட தகவல்தொடர்பு கருவியில் வெடிபொருளை பொருத்தி, இஸ்ரேல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.
விசாரணையில், கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ரின்சன் ஜோசப், பல்கேரியாவில் உள்ள தனது நிறுவனம் வாயிலாக இஸ்ரேல் பயங்கரவாத குழுவினருக்கு பேஜர் விநியோகம் செய்தது தெரியவந்துள்ளது. உயர் படிப்புக்காக நார்வே சென்ற ரின்சன் ஜோசப் அங்கு குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்.