வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைப்பதைக் கண்டித்து திருச்சியில் தெய்வத் தமிழ் பேரவை மற்றும் வள்ளலார் பணியகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் தெய்வத் தமிழ் பேரவை மற்றும் வள்ளலார் பணியகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
வள்ளலார் பக்தர்களின் அமைதியை கெடுக்கும் வகையிலும், வள்ளலார் ஞானசபை சொத்துக்களை கபளீகரம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பக்தர்கள், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்பகுதியில் எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாதென வலியுறுத்தினர்.