குஜராத்தில் இருப்புப் பாதையில் கம்பி வைத்து ரயிலை கவிழ்க்க நடைபெற்ற சதி முறியடிக்கப்பட்டது.
சூரத் மாவட்டம் கிம் ரயில் நிலையம் அருகே இரவு நேரத்தில் இருப்புப் பாதையில் இரும்பு கம்பிகளை விஷமிகள் சிலர் வைத்துள்ளனர்.
இதைக் கண்டறிந்த ரயில்வே பணியாளர்கள் அதை அகற்றி, ரயிலை கவிழ்க்க நடைபெற்ற சதியை முறியடித்தனர். இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் சில மணிநேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.