சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில்,அக்கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதில் பொதுக்குழு, மாநில நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில், மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவது என்பது உள்ளிட்ட 16 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட ம.நீ.ம. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.