ஈரானில் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 887 கைதிகளுக்கு அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி பொது மன்னிப்பு வழங்கி, தண்டனையைக் குறைக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.
நீதித்துறை தலைவரான குலாம்ஹுசைன் மொஹ்செனி இஜாவின் பரிந்துரையை ஏற்று, அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த பொதுமன்னிப்பின் கீழ், 59 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.