தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் வரையிலான மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது.
சென்னையில் நாள்தோறும் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்
அந்த வகையில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம் வரையிலான மின்சார ரயில் சேவை இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
மேலும், பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.