பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு வந்த முதல் விமானத்துக்கு வாட்டர் சல்யூட் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்ட பின்பு பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு, தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனம் இணைந்து புதிய விமான சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டது.
இதனையடுத்து பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு வந்த முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வாரத்தில் மூன்று நாட்களான செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் விமானம் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.